தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

அண்மையில் எழுதியவை

எழுதியவை அனைத்தும்

வாசகர் கருத்துக்கள்

அன்புடையீர்,

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புதிய ஆண்டாம் 2012 ன் வருகைக்கு நம் மனமகிழ்வோடு வரவேற்போம். கூட்டு எண் 5 ஆகி வரும் ஆண்டு குழப்பங்களை விலக்கி, குதூகலம் தந்திடும் ஆண்டாக அனைவருக்கும் அமையவுள்ள அந்த அற்புத நாளுக்கு காத்திருந்து வரவேற்போம்..

குறிப்பு

வருகிற 26-12-2011 முதல் 29-12-2011 முடிய நான்கு தினங்களுக்கு ஜோதிட தம்பதி சென்னை வருகை தரவுள்ள விவரம் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற நவம்பர் 30ம் தேதி வரை பதிவுடன் முன் அனுமதி பெற்றுள்ள வரிசை எண்.7119 முதல் 7200 வரை எண்ணுள்ள அன்பர்கள் ஆலோசனைக்கு அணுகலாம் என்ற விவரத்தை அன்புடன் சமர்ப்பித்துக் கொள்கிறோம்.

புதியதாக பதிவு மேற்கொள்ள தொலைபேசி எண். 9442586300 க்கு தயவு செய்து அணுகவும். நன்றி


அன்புடையீர்,

தைத்திருநாளாம் பொங்கல் திருநாள் என்பது ஒவ்வொரு தமிழ் மாதம் தை மாதம் முதல் தேதி உலகெங்கும் உள்ள விவசாயப் பெருமக்கள் மற்றும் தமிழ் மக்கள் கொண்டாடுவது வழக்கம். ஜோதிட ரீதியில் இம்மாதத்தினை மரக சங்கராந்தி என்று வர்ணித்து அந்த ஆண்டின் முழுப் பலனையும் ஒவ்வொரு ராசி ரீதியாக தெரிந்து கொள்வது - பூஜிப்பது - செயல்படுவது வழக்கம்.
இந்த ஆண்டின் ராஜா, மந்திரி, சேவகர் மற்றும் அதிகார வரம்புகள், இயற்கை வளங்களின் மாற்றங்கள், யார் யாருக்கு எந்தெந்த வகையில் முன்னேற்றம், பின்னடைவு என்றவாறு இடைக்காடார் அருளிய செய்யுளும், மகர சங்கிராந்தி பலனும் தெரிந்து கொள்வது அவசியமாகும். தொடர்நது எழுதுகிறோம்.


சனிப் பெயர்ச்சி துணுக்குகள்

அன்புடையீர்.,

வணக்கம்.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, முக்கியமாக, கனடா, சிங்கப்பூர், அமெரிக்கா, அயர்லாந்து, துபாய், போன்ற பல்வேறு வெளிநாட்டிலிருந்தும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்து, வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி பல்வேறு புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் ஆன்மீக ஆர்வலர்கள் கடந்த 15 தினங்களாக தினமும், இணையதளத்தைப் பார்வையிட்டு – 27அரை ஆண்டுகளுக்கு ஓரு முறை துலாராசியில் உச்ச சனியாக பெயர்ச்சி பெற்று தன்னுடைய முழு ஆதிக்கத்தையும், இந்த உலகுக்கு அருளகின்ற அற்புதப் பலன்களைக் காண வெகு ஆர்வமாக உள்ளது விவரங்கள் தொடரந்து தொலைபேசி மற்றும் இணையவழி கடிதங்களாக குறுஞ்செய்திகளாக., கேட்டு அவர்களின் அன்பான ஆர்வத்திற்கு பதில் தர தாமாதமாக ஒரு சில பிராயணங்கள் இருந்த்து.. தங்களின் பொறுமைக்கு அன்புடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்..

இதோ சனிப்பெயர்ச்சிக்கு நாம் கைக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு பற்றிய விளக்கங்களை இன்று காண்போமா..

சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது ஆன்மீக ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மருத்துவ ரீதியிலும் முக்கியமாக சிறந்த்தாக கண்டறியப்பட்டுள்ளது. விரத விவரம்

சனிக்கிழமை மட்டும் வாரம் ஒரு நாள் ஒரு வேளைச் சாப்பாடு மட்டும்

முதல் நாள் வெள்ளிக் கிழமை எள்ளு துணியில் கட்டி அல்லது தாளில் பொட்டலமாக்க் கட்டி தலையில் அடியில் வைத்து தூங்கச் செல்வது நல்லது, மறுநாள் அந்த எள்ளை சாத்த்தில் கலந்து காக்கைக்கு இட்டுவிட்டு விரத்த்தினை ஆரம்பிப்பது நன்று, இது நம் வசதிக்குத் தகுந்தபடி, 5வாரம், அல்லது 7 வாரம் அல்லது 9 வாரம் அதிக பட்சம் 108 வாரம் எனச் செய்வது நல்லது.

பின்னர் சுத்தம் செய்த எள் மற்றும் ஏலம் பொடி செய்து இடித்து, வெல்லத்துடன் சேர்த்து, வைத்துக் கொண்டு, சிறிதளவு உண்டு, (முன்னதாக ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள், ஆஞ்சநேயர், தர்மராஜன் ஆகியோரை துதித்து நெய்வேத்தியம் எள்சாதம், வடை) விரதம் ஆரம்பிக்க வேண்டும்.

விரத நாளில் பணிக்குச் செல்வோர் சோர்வு ஏற்படும் போது பால் அருந்தலாம். பழங்கள் சாப்பிடலாம். மதியம் சைவச் சாப்பாடு வாழை இலையில் கிழக்கு முகமாக அமர்ந்து, சாப்பிட நன்று. மாலையில், தெயவ வழிபாடு, தேங்காயில், எள் தீபம் ஏற்றி, சனீஸ்வர நீராஞ்சனம் செய்து வழிபடுவது நல்லது. இரவில், எளிய முறையில் ஜீரணமாக்க் கூடிய உணவுகள் (புதிதாக அப்போதே தயாரித்த இட்லி போன்றவை) அருந்தி, தெய்வ சங்கல்பத்துடன், இஷ்ட தெய்வ சிநதனையும் கூட்டிக்கொண்டு, சனிக்கிழமை படுக்கைக்குச் சென்று. ஞாயிற்றுக் கிழமை விழிக்கும் போது புதிய தேஜஸ் உடம்பில் பரவியிருக்கும். உடம்பில் பழையன கழிதலும் புதியன புகுதலுமான, செல்கள் புதுப்பிக்கப்பட்டு அடுத்த வாரத்திற்குரிய அனைத்து புத்துணர்வுகளும் நிரம்பியிருக்கும். சுபம்

சனிப் பெயர்ச்சி பலன்கள் அறிவதில் நாம் மிக்க ஆர்வமாக இருக்கிறோம். ராசிக்குரிய பலன்கள் மட்டும் நமக்கு பூரணமான விளக்கத்தை தரும் வாய்ப்பு 30 சதம் தான்.. மேலும் நமக்கு நடக்கின்ற திசா புக்தி லக்ன ரீதியான குடும்ப, பூர்வ புண்ணிய, அயன சயன ஸ்தானங்களின் பலன்களுடன், தற்போதைய கோட்சார பலன்களான சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிகளையும் கணக்கிட்டு துல்லிய பலன்களை அறிவது தான் சிறந்தது. அதன் பொருட்டு, அன்பர்கள் தாங்கள் பலன் பெற விரும்புபவரது, பெயர், பெற்றோர் பெயர், பிறந்த நாள், பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகியவைகள் குறித்து தகவல் தந்து, காணிக்கை அனுப்பி பலன் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. பயன்படுத்திக் கொள்ளவும், ஜோதிட ஆய்வக உயர்விற்கு உதவிடவும் அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.

ஜோதிட தம்பதி

ஜோதிட தம்பதி



அய்யா பாகவதர் காலமானார்.

வீரவநல்லூர் கே.எஸ். அய்யா பாகவதர் நேற்று காலை அவரது வீட்டில் 82வது வயதில் காலமானார். இவர் பல்வேறு கிராமங்கள், நகரங்கள், பெரு நகரங்கள் ஆகியவற்றில், கோவில் விழாக்களில், திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளின் குரலிசையைப் போல் உபன்யாசம் செய்து வந்தபோது, “கிருபானந்த வாரியார் சுவாமிகளின் எதிரொலிஎன அறிமுகம் செய்து வந்தபோது, சுவாமிகளே அழைத்து, பிரதி ஒலி புகழ்என அடைமொழியை மாற்றச் செய்து பாராட்டப்பெற்றவராவார். தமிழகமெங்கும், பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள், திருமண விழாக்களில், ஹரிகதை, பாரதம், சீதா கல்யாணம் போன்ற உபன்யாசங்கள் செய்து வந்தார். , அரசின் நலிவுற்ற கலைஞராம்,மஹா பாரத பண்டித பூரண வசனதிலகம் - ஹரி கதா சக்ரவர்த்தி எனப் பலராலும் பாராட்டப்பெற்று, வீரவநல்லூர்,புதுக்குடி, மதுரை, பரமக்குடி, புளியரை, சங்கரன்கோவில், பண்பொழி போன்ற ஊர்களில் வருடந்தோறும், ஸ்ரீ திரௌபதை அம்பாள் சமேத ஸ்ரீ அர்ச்சுனர் திருக்கோவில்களில்,பூக்குழிதிருவிழாக்களில்தனக்கே உரித்தான மணியாட்டி மஹாபார உபன்யாசம்மூலம் பாரதக் கதை முழுவதும் 10 நாள் நிகழ்வாக ஆண்டு தோறும் நடத்தி பெருந்திரளான மக்கள் மனதில் வசமாகத் திகழ்வதோடு, வானொலி, தொலைக்காட்சியிலும் பங்கு பெற்றுள்ளார், மேலும் வீரவநல்லூர் ஸ்ரீ பாலகிருஷ்ண சங்கீத சபா ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்து,ஸ்ரீ பாலகிருஷ்ணசபாவுடன் இணைந்த பல்வேறு திருப்பணிகளிலும் சேவையாற்றி, கோவில்களின் திருப்பணிகளுக்காக, இறையருளைப் பிரார்த்தித்துப் பாடி, உரிய கனதனவான்களை சந்தித்து நிதிபெற ஊக்கம் தந்த தெய்வத் தொண்டுள்ளம் நிறைந்தவராவார். அன்னாரின் இறுதியாத்திரை நிகழ்ச்சியில், வீரவநல்லூர் பேரூராட்சித் தலைவர் திரு எஸ்.கே. பழனிச்சாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் திரு ராதாகிருஷ்ணன், பாளை ஜோதிட தம்பதி உஷா ரெங்கன், கவுன்சிலர்கள்,சங்கீத சபாக்கள், சௌராஷ்ட்ரா சபாக்கள், கலைமகள் கல்வி அறக்கட்டளையினர், நெசவாளர் சங்க பிரமுக்ர்கள், பல்வேறு ஊர்களிலிருந்து வந்த சமுதாய பொதுமக்கள், பண்பொழி ஆன்மீக குழுவினரும் கலந்து கொண்டனர்.




அன்பர்கள் அனைவருக்கும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

மறுமொழிகள்

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை