முதுமொழிகள் = பழமொழிகள் மற்றும் முக்கிய புத்துணர்வு தரும் சொற்றொடர்கள்


இன்றைய உலகில் நாம் மனதிடத்துடன் ஒரு செயலைச் செய்யும் போது தான் அதன்கண் முழு வெற்றி கிடைக்கிறது. ஜாதக ரீதியில் நாம் பார்க்கின்ற நடைமுறைகளை வைத்து பார்க்கும் திட சிந்தனைகளை செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் கொடுக்கின்றன. அவ்வாறு கிரகங்கள் கொடுக்கின்ற நற்பலன்கள் நமக்கு பூரணமாகக் கிடைத்திட நாமும் ஓரளவுக்கு முன்னதாக மனஉறுதி கொள்ள வேண்டாமா?..........................


கீழ்க்கண்ட துளிகள் நாம் படிப்தனால் நம் மனதில் தைர்யமும் முன்னேற்றமும் கிடைத்திடுமே..


1) சோம்பித் துருப்பிடித்துப் போவதை விட உழைத்து தேய்ந்து போவது மேல்.

2) மனிதன் உழைக்கப் பிறந்துள்ளான், பறவை பறக்கப் பிறந்துள்ளது.

3) நாம் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பது - நாம் முயற்சி செய்கிற வரையில் நமக்கேத் தெரியாது.

4) ஆர்வம், கொழுந்து விட்டு எரியும் ஆசை, நாட்டம் பெற்றிடுக.

5) ஒரே சமயத்தில் இரு முயல்களை பிடிக்க முயன்றால் இரண்டுமே தப்பியோடிவிடும், எனவே ஒரு துறையில் மட்டுமே முழு மூச்சுடன் கவனம் செலுத்தி முழுமைத்திறன் பெற்றிடுக.

6) எதிலும் வெற்றியைப் பெறத் தொடர் முயற்சி தேவை.

7) காலமும், கடலலையும் எதற்காகவும் காத்திராது. சாதிக்கப் பிறந்த நீ முயற்சியைத் தொடர்வாயாக.

8)சாதனைக் குறிக்கோளுக்கு வானமே எல்லை

9) முட்டுக்களைகளை முறித்தெறி

10) என்னால் முடியும் என உறுதி கொள், எண்ணங்களே செயலுக்கு அடிப்படை.

இன்னும் தொடரும்...


ஜோதிட தம்பதி,

REMEDY FOR DEPRESSION OR STRESS OR MENTAL WORRIES ETC.,




அனைவருக்கும் வணக்கம். இந்த சர்வதாரி ஆண்டில் எல்லா வளமும் எல்லோரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இறைவனின் பொற்பாதக்கமலங்களை பணிந்து வணங்கி எதிர் கால நலனுக்காக பிரார்த்திப்போமாக.
REMEDY FOR DEPRESSION OR STRESS OR MENTAL WORRIES ETC.,
சமீப காலமாக நாங்கள் அதிகம் சந்திக்கும் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பிக் கேட்கும் ஒரு தகவல் என்னவென்றால், டிப்ரசன் எனப்படும் மனச்சோர்வு நோய்க்கு புதிதுபுதிதாய் பலர் உள்ளாகிறார்கள். அவர்களை எவ்வாறு நாம் காப்பாற்றி சகஜ நிலைக்கு கொண்டு வருவது என்பது போன்ற கேள்விகளுக்கு இங்கே விடை காண்போமா.
இது எதற்குச் சமம் என்றால்-முதலை வாயில் அகப்பட்ட யானையினை உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது தண்ணீரில் முதலைக்கு பலம் அதிகம், தரையில் யானைக்கு பலம் அதிகம், இஙகே தண்ணீர் அருந்தச் சென்ற யானை முதலை வாயிற் அகப்பட்டது போல் மனிதர்கள் தம் உடம்பில் உள்ள Heart, Lungs, Brain, Kidneys, Spinal cord போன்ற அவசிய உறுப்புகள் மிகச் சரியாக உள்ள போதும்-மனம் எனும் உறுப்பு தனது நிலைப்பாட்டிலிருந்து தவறி-ஒரு சோக வலைக்குள் இணைந்து-மனச்சோர்வு எனும் கொடிய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தரும் stress, Depression, tiredness போன்ற மன வியாதிகளிலிருந்து விடுபட நாம் தினமும் ஸ்ரீ மஹா விஷ்ணுவை வணங்கி உரிய பரிகாரங்கள் இவிடம் செய்து பலன் பெறுவோமாக,

தயவு செய்து ஒவ்வொருவரும் மற்றவர் கவலையிலிருந்து விடுபட உதவுஙகள். நமது உதவிகள் அப்படியே பன்மடங்காகி நம் குழந்தைகளுக்கு பலன் திருப்பிவிட, அதனின் நற்பலன்கள் நம் குழந்தைகள் அனுபவிக்கட்டுமே. சுபம்.


இவண்


ஜோதிட தம்பதி.

ஜோதிடத் தம்பதியர் உஷா ரெங்கன் அவர்களின் மகள் ரெ. அனந்த நாராயணிக்கு மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளமைக்கு பாராட்டு


ஜோதிடத் தம்பதியர் உஷா ரெங்கன் அவர்களின் மகள் ரெ. அனந்த நாராயணிக்கு மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளமைக்கு பாராட்டி பரிசு வழங்கிய விழாச் செய்தி நாளிதழில் பிரசுரமாகியதை அருகில் காணலாம். நாமும் குழந்தை மருத்துவக் கல்வியில் சிறக்க வாழ்த்துவோம். நன்றி,