பொதுவாக எல்லோருக்கும் அதிக வேளைகளில் பயன் தரும் பொதுவான சான்றோர் வார்த்தைகள் ஒரு சில
உண்மை தெய்வ பக்தி உள்ளவரிடத்து தூய்மையான சிந்தனைகளே உண்டாகும்.
நம்முடைய வாழ்வு பிறருக்கு லட்சியமாக அமைந்து விட்டால் நாம் புண்ணியவான்கள் தான்.
அதற்கு ஒரு எளிய வழி
அறிவு பெருகப் பெருக ஆசை சுருங்க வேண்டும்!சோம்பலைத் தவிர்க்க வேண்டும்!
அறவழியில் வாழ்வதால் மகிழ்ச்சியும், சான்றோர் உறவால் ஒழுக்கத்தையும் பெறலாம்.
மேலும் கீழ்க்கண்ட வார்த்தைகளின் படி நம் வாழ்க்கை நெறிமுறைகளை அமைத்துக் கொள்ளலாமல்லவா!
பொறாமை உள்ளவரிடத்து புண்ணியம் இருக்காது!சுகத்தை விரும்புவனிடம் கல்வி இருக்காது!பேராசை உள்ளவரிடத்து நாணம் இருக்காது!உறுதி இல்லாதவரிடத்து எதுவுமே இருக்காது!!
ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்கட்குச் சமம்!அத்தகு தாய் தந்தையர்க்கு தொண்டு செய்பவர்கள் தவம் செய்ய வேண்டியதில்லை!!தந்தை சொல் படி நடப்பவன் சொர்க்கம் அடைகிறான்!!நல்லது அல்லாதவற்றை அக்கணமே மறந்திடுக! பண்பாடு என்பது நம் உயிரினத்ற்கெல்லாம் அச்சாணி! பிறர் தவறை மன்னித்தால் அது மனித குணம்!! அத்தவறை மறந்து நட்பு கொண்டால் அது தெய்வ குணமாகும்!!
நம்மை இறைவன் மன்னிக்க வேண்டுமா? நாம் பிறரை மன்னிக்க வேண்டும்!
சான்றோர் வார்த்தைகள் ஒரு சில
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி.. .. ..
குறிப்பு: தங்கள் குழந்தைகளின் ஜாதகங்களை முன்னரே இவிடம் அனுப்பி தொடர்பு கொண்டு அவரவர்க்கு ஜாதக ரீதியில் என்ன மாதிரியான கல்வி பயன் தரும் என்பதனை கிரகசார வழியில் தேர்வு செய்து கொண்டு உரிய நேரத்தில் அதன் வழியும் பரிசீலிக்க நன்மை தரும், சுபம்,
"The Great Peace of Mind" ( COPY OF DIPLOMA IN ASTROLOGY - WHICH DENOTE THE QUALIFICATION IN ASTROLOGY - ISSUED BY THE FAMOUS UNIVERSITY IN TAMIL NADU

அன்புடையீர் வணக்கம். நாம் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் இனி அதிகரிக்கும் தானே. ஏனெனில் ஜோதிட ஆலோசனை என்பது நமக்கு ஒவ்வொரு கோணத்திலும் குறிப்பாக முக்கியமான எதிர்கால பணிகளான கல்வி-வேலை-திருமணம்-முக்கிய மாற்றங்களான-பூமி-மனை-வாகனம்-விலை உயர்ந்த பொருட்கள் சேர்க்கை-இன்ன பிற-தருணங்களில் நமது யோகபாவங்கள் எப்படி உள்ளன என அறிந்து செயல்படுவோமல்லவா? அக்காலங்களில் நாம் தகுதியான அதேநேரம் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒரு குடும்ப ஜோதிட தம்பதியை ஜோதிட ஆலோசனைகளுக்குத் தேர்வு செய்யலாமல்லவா. இதோ தாங்கள் எங்கள் தகுதியைத் தெரிந்து கொள்ளும் வகைக்கு எங்களது ஜோதிடவியல் பட்டயச் சான்று ( COPY OF DIPLOMA IN ASTROLOGY - WHICH DENOTE THE QUALIFICATION IN ASTROLOGY - ISSUED BY THE FAMOUS UNIVERSITY IN TAMIL NADU - INDIA) அருகில் காணலாமே! மிக்க மகிழ்ச்சி. குறிப்பு தாங்கள் எந்நேரமும் எங்களைத் தொடர்பு கொண்டு ஜோதிட மற்றும் சித்த மருத்துவம் இவை தவிர அன்றாட வாழ்க்கையில் நாம் கடை பிடிக்கும் பண்பாடு கலாச்சார அம்சங்கள் மற்றும் பூஜா வழிபாடு முறைகளில் உள்ள அர்த்தங்கள் வாழ்க்கையில் நிம்மதிக்காக "The Great Peace of Mind" பெறும் பொருட்டு ஒரு காணிக்கை (KANIKKAI i.e. JUST DONATION simple fee for the HOLY PROCESS) செலுத்தி பதிவு செய்து கொண்டும் தாங்கள் எங்களை ஒரு பாசப்பிணைப்புடன் தொடர்பு கொண்டு இக்கலையை மேலும் வளர்க்க உதவலாமல்லவா! நன்றி.
ஜாதகம் கணிக்க
PLEASE KINDLY SEND WITH KANIKKAI (i.e. Fees) - MOSTLY the fees will goes tobe for Pooja Expenditure in Temple and School going Poor Stundent!
WE OFFER THE ONLINE ASTRO SERVICESTO EVERY ONE THOUSE WHO ARE REALLY INTERESTING TO KNOW THE PROGRESS ABOUT THEIR FORTUNE. YOU SEND THE BIRTH DETAILS THAT IS
1) NAME:
2) FATHER'S NAME:
3) PLACE OF BIRTH
4) DATE OF BIRTH
5) TIME OF BIRTH
6) STAR (IF POSSIBLE)
7) RASI (IF POSSIBLE)
8) LAGNA (IF POSSIBLE)
9) DASA BALANCE (IF POSSIBLE)
THEN WE GO THROUGH THEIR HOROSCOPE PLANATERY POSITION FROM THE COSTING OF HOROSCOPE THEN WE KNOW ABOUT THE HEALTH, EDUCATION, JOB, MARRIAGE, CHILD ETC.,
THANK YOU IN ANTICIPATION.
BY
JOTHIDA KALAIMAMANI - JOTHIDA THAMBATHI - USHARENGAN.
TEL: (+91)(0) 9443423897 (+91) 0462 - 2586300
E-MAIL: usharengan@hotmail.com
குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் குறித்து.. .. நாம் என்னென்ன செய்யலாம்.
1. THE ASTROLOGY FIELD IS A VERY VAST SUBJECT
2. VERY RARE PEOPLE ONLY GETTING KNOWLEDGE
3. IF IT IS CONTINUE TO NEXT GENERATION WE MAKE ARRANGEMENT FOR GROWTH.
4. IF YOU WANT TO HELP FOR THE ASTROLOGY FIELD PLEASE SEND KANIKKAI (DONATION) TO OUR CENTRE.
5. THANKS A LOT!.
நாமும் நமது சந்ததியினரும் ஆல்போல் தழைத்து அருகு போல் வேருன்ற திருமண வாழ்க்கையை எப்படி அமைப்பது சிறந்தது எனச் சிந்திப்போமா.
"யானையின் பலம் தும்பிக்கையில் / மனிதனின் பலம் நம்பிக்கையில் என்பது போல முன்னோர்களின் முடிவுகளில் நம்பிக்கை கொள்வோமா"
தினம் தினம் லட்சம் கனவுகளைச் சுமக்கிறோமே! அத்தகு கனவுகள் நனவாகுமா!
என் இனிய தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம் நன்நாளான 21/03/2008 வெள்ளிக்கிழமையன்று சாஸ்தாவை வழிபட அன்புகூர்ந்து வேண்டுகிறேன்
திருமணங்கள் அதிக நம்பிக்கையுடனும்-இறையுணர்வுடன்
உதவும் கரங்களுக்கு உளமார்ந்த நன்றி!
Sun-Moon-Mars-Mercury-Jupiter-Venus-Saturn-Rahu-Kethu

இணைய தளத்தில் இப்பக்கம் காணுவோர் அனைவருக்கும் எங்களது இனிய வணக்கங்கள்! நாள் தோறும் ஒரு முறையேனும் இறைவனை தியானிக்கும் நல்லுள்ளங்கள் உலகில் ஆங்காங்கே இருப்பதால் தான் கோவில்கள் தோறும் கூட்டமும் அலையாய் பெருகி வருவது கண்கூடு, பிரார்த்தனையில் கிடைத்தற்கரிய பல்வேறு வகையான முன்னேற்றங்கள் கிடைக்கத் தான் செய்கின்றன, நாமும் அத்தகைய முன்னேற்றங்களை காண முற்படுவோம்,நாம் அன்றாட இறைவனின் திருக்கோவில் சன்னிதானம் சென்று வழிபட இயலாவிடினும் கீழ்கண்ட நவக்கிரஹ சுலோகத்தை தினமும் பாராயணம் செய்து பலன் பெறுவோமாக!சுலோகம்ஆதித்யாய - சோமாயா - அங்காரக - புதயாஸ - குரு - சுக்ர - சனீஸ்வராய - ராகவே - கேதுவே - நமோ - நமஹ!,(This is the word refer to the PLANET OF SUN - PLANET OF MOON - PLANET OF MARS - PLANET OF MERCURY - PLANET OF JUPITER - PLANET OF VENUS - PLANET OF RAGHU - PLANET OF KETHU FOR PRAYER) Thank to all!நன்றி!.
அன்பான வாடிக்கையாளர்களே!
அன்பான வாடிக்கையாளர்களே! உங்கள் அனைவருக்கும் இனிய தமிழால் வணங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் எங்கள் உள்ளத்தில் அடித்தளத்தில் நண்பர்களாக ஆகியுள்ளீர்கள். உங்கள் ஒவ்வொருவரின் அன்பிற்கு பாத்திரமான பின்பு நீங்கள் எங்களை உங்கள் குடும்ப ஜோதிடராக ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் அன்பும் நட்பும் பலப்படுவதோடு, வருங்காலத்தில் ஜோதிட / ஜாதகங்கள் பற்றி தெளிவாகவும் நிறைவானதாகவும் ஆன பலன்கள் குறித்து ஒருவருக்கொருவர் கலந்துரையாட இயலுமல்லவா! சுதந்திரமாக தொடர்பு கொள்ளுங்கள், உலகத்து மாசற்ற அன்புடன் ஒருவருக்கொருவர் இனி நண்பர்கள் என்ற பெருமிதம் கொள்வோம், நன்றி,
ABOUT THE THIRU KARTHIKAI FESTIVAL : 24-11-2007.
கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்திலிருக்கும் போது கார்த்திகை விழா கொண்டாடப்படுகிறது. பஞ்சபூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம் இவைகளால் ஆனதே பிரபஞ்சம். அவற்றுள் நெருப்பை வழிபடுவதுதான் தீபத் திருவிழா.நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது இக்கார்த்திகை மாதத்தில்தான். தீபத் திருவிழா என்றதுமே நம் நினைவில் வந்து நிற்பது திருவண்ணாமலை திருத்தலம்தான். திருவண்ணாமலை கார்த்திகை தீபம் தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப் பெரிய உற்சவங்களில் ஒன்று. இவ்விழா பதினேழு நாட்களுக்கு பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தின்போது முறையே முதல் மூன்று நாட்கள் எல்லைப் பிடாரி, துர்க்கை, விநாயகர் ஆகியவர்களுக்கான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.மேலும் இந்த மூன்று நாட்களில் ஐயனார், சப்தமாதர்கள் எல்லைத் தேவதைகள் ஆகியவர்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறும். பின்னர் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் இவ்விழா 10 நாட்களுக்குச் சிறப்பாக நடைபெறும். இந்த 10 நாட்களும் விதவிதமான அலங்காரங்களுடனும், மேளம், நாதஸ்வரம், துந்துபி போன்ற இன்னிசைக் கருவிகள் முழங்கவும் சைவத் திருமறைப் பாடல்கள் ஒலிக்கவும் வெவ்வேறு வாகனங்களில் அண்ணாமலையார் வலம் வருவார்.ஜோதி வடிவில் பெருமாள் :காஞ்சிபுரம், திருத்தண்கா (தூப்புல்) என்ற திவ்ய தேசத்தில் சேவை சாதிக்கின்றவர் தீபப் பிரகாசர் - விளக்கொளிப் பெருமாள்.ஒரு முறை சரஸ்வதிக்குத் தெரியாமல் பிரமன் யாகம் நடத்தினான். இதை அறிந்த சரஸ்வதி, மாயநலன் என்ற அரக்கனின் துணையுடன் அந்த யாகத்தை அழிக்க முயன்றாள்.மாயநலன், யாகத்தை அழிக்க உலகம் முழுவதையும் இருட்டாக்கினான். பிரமன் திருமாலின் துணையை வேண்டினான். திருமாலும் ஒரு பேரொளியாகத் தோன்றினார். இருளை அகற்றினார். எனவே, திருமாலுக்குத் தீபப் பிரகாசர் என்ற பெயர் தோன்றிற்று. இப்படி ஜோதி வடிவில் தோன்றிய பெருமாளை தீப உருவில் வைணவர்கள் வணங்குவர்.அண்ணாமலையார் எழுந்தருளும் வாகனங்கள் : முதல் நாள் -------- அதிகார நந்திஇரண்டாம் நாள் ---- வெள்ளி இந்திர விமானம்மூன்றாம் நாள் ----- சிம்ம வாகனம்நான்காம் நாள் ----- கற்பக விருட்சம்ஐந்தாம் நாள் ------ வெள்ளி ரிஷப வாகனம்ஆறாம் நாள் ------ வெள்ளிரதம்ஏழாம் நாள் ------- மகாரதம் (மரத்தேர்)எட்டாம் நாள் ------ குதிரை வாகனம்ஒன்பதாம் நாள் ---- கைலாச வாகனம்பத்தாம் நாள் ------ தங்க ரிஷபம்முக்கிய விழாவான தீபத் திருநாள் பத்தாம் நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் நான்கு மணிக்கே திருவண்ணாமலைக் கோயிலில் பரணி தீப தரிசனம் காட்டப்படும். அண்ணாமலையின் திருச்சன்னதியில் தீபம் ஏற்றப்பட்டு, அந்த தீபம் கோயிலிலுள்ள பிற தேவதைகளின் சன்னதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அந்தச் சன்னதிகளில் ஏற்றப்படும். பின்னர் அந்த எல்லா தீபங்களும் மீண்டும் ஒன்று சேர்க்கப்படும். "ஒரே பரம்பொருள் பலவாய்த் தோன்றி மீண்டும் ஒன்றாகிறது" எனும் தத்துவத்தை இந்நிகழ்ச்சி விளக்குகிறது. இந்த பரணி தீபத்திலிருந்து தீப்பந்தம் ஏற்றப்பட்டு, பிறகு அதுமுறையான பூஜைக்குப் பின் மலையுச்சிக்கு எடுத்துச் செல்லப்படும். மலையின் மீது ஏறிச் செல்வதற்குச் சரியான பாதை இல்லை என்றாலும் தீபத்துக்குத் தேவையான பொருட்கள் குறிப்பிட்டவர்களால் மலையுச்சிக்கு எடுத்துச் செல்லப்படும்.மலையுச்சியில் பகல் 2 மணி முதல் தீபம் ஏற்றுவதற்கான ஆரம்ப வேலைகள் துவங்கி விடும். முதலில் கொப்பரை நிறுத்தப்பட்டு அதில் துணித்திரி, நெய், கற்பூரம் ஆகியவை இட்டு நிரப்பப்படும். அன்று மாலை 6 மணிக்கு தீப தரிசன மண்டபத்தில் அண்ணாமலையாருக்கு தீப ஆரத்தி காட்டி, அதை உயரத் தூக்கிப் பிடிப்பார்கள். அந்த தீபத்தைக் கண்டதும் மலையுச்சியில் தீபம் ஏற்றுவார்கள். மலையின் மேல் தீப தரிசன ஜோதியைக் கண்டதும் கோயிலுக்குள் தீப தரிசன மண்டபத்துக்கு எதிரில் அர்த்தநாரீஸ்வரர் வலம் வருவார். இக்கோயிலிலுள்ள அர்த்தநாரீஸ்வரர் இந்த ஒருநாள் மட்டுமே வெளியே வருகிறார். மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், "அண்ணாமலையானுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிடுவார்கள். "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியைக் காண்பதுதான் இந்த தீப தரிசனம் ஆகும்" என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். தீப தரிசனத்துக்குப் பின்பு அண்ணாமலையார் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வருவார்.பதிமூன்றாம் நாள் அண்ணாமலையார் தெப்போற்சவம் நடைபெறும். பதினான்காம் நாள் அண்ணாமலையார் கிரிவலம் செய்வார். பின்னர் பதினைந்தாம், பதினாறாம் நாட்களில் முறையே அம்பிகைக்கும் முருகனுக்கும் தெப்போற்சவம் நடைபெறும்.கடைசி நாளான பதினேழாம் நாள் சண்டிகேசுவரர் உற்சவத்துடன் கார்த்திகை தீப விழா நிறைவு பெறுகிறது.




