சிறப்புச் செய்திகள்:
விருதுச் செம்மல் " M. VIJAYAN " , செயலாளர், தமிழ்நாடு சினிமா கலை மன்றம் அவர்களின் நன் முயற்சிக்கு பாராட்டு!!.
சென்னையிலுள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ராணி சீதை ஹாலில் வைத்து, தமிழ்நாடு சினிமா கலை மன்றம் சார்பாக கடந்த 30-03-2008 அன்று மாலை குயில் இசை வாணி உலக பிரசித்தி பெற்ற திரைப்பட பின்னணி பாடகி மற்றும் அம்மன் வழிபாட்டு தனிப் பாடல்கள் பாடிய பாடகி செல்வி. L.R.ஈஸ்வரி அவர்கள் தலைமை தாங்க, நீதியரசர் திரு P. பாஸ்கரன் M.A.B.L., (Chairman, Loss of Ecology (P&PC) Authority, Tamil Nadu அவர்கள் விருதுகளை வழங்க, சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட மற்றும் T.V. நடிகை செல்வி "கலைநிலா" நீலிமா ராணி கலந்து கொள்ள, சென்னை ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மனை மங்கலச் செல்வர் திரு M. ஆறுமுகம் அவர்கள் பரிசுகளை வழங்க, திரைப்பட முன்னணி நடிகர் திரு சந்திரசேகர், காத்தாடி ராமுர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பல்வேறு கலைத் துறைகளைச் சார்ந்த சாதனை படைத்த சித்த மருத்துவர்கள்-சிறந்த கல்வி நிறுவனங்கள்-தலைமையாசிரியர்கள்-கணிணி மைய பயிற்றுநர்கள்-சமுக சேவையாளர்கள்-கவிஞர்கள்-கதாசிரியர்கள்-பின்னணி நடிகர்-நடிகைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு மத்தியில், சிறந்த ஜோதிடதம்பதி மற்றும் ஜோதிட ஆய்வகத்திற்கான விருது பாளையங்கோட்டை சுவாதி ஜோதிட ஆய்வக ஜோதிட தம்பதி திரு & திருமதி நா. ரெங்கன் - அ. உஷா ரெங்கன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற ஜோதிடத் தம்பதியரை பொதுமக்களுடன் வாடிக்கையாளர்கள் பாரட்டினர். வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் மட்டுமின்றி ஜோதிட ஆர்வலர்கள் பலரும் பாராட்ட அனைவருக்கும் ஜோதிடத் தம்பதி உஷா ரெங்கன் நன்றி கூறினார்.

0 comments:
Post a Comment