"யானையின் பலம் தும்பிக்கையில் / மனிதனின் பலம் நம்பிக்கையில் என்பது போல முன்னோர்களின் முடிவுகளில் நம்பிக்கை கொள்வோமா"
அன்புடையீர்! இங்கு தமிழகத்தில் திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் முடிவு செய்வது தொன்று தொட்டு காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகத் தான் இங்கு நடைபெறும் திருமணங்கள் அதிக நம்பிக்கையுடனும்-இறையுணர்வுடன் காலம் காலமாக புஷ்டியான தம்பதியராக நற்புத்திரப்பேறு பெற்று சிறப்பு பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சி ஒரிரு பகுதியில் மிகச் சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்ட திருமணப் பொருத்தங்கள் தற்காலத்தில் ஒதுக்கித் தள்ளப்பட்டு வருகிறது, இதன் காரணமாக நடக்கும் பல்வேறு குழப்பஙகளால்-அந்த ஒரு தம்பதியருக்கு நடைபெறும் சிறு சிறு பிணக்குகள் ஒட்டுமொத்தி குடும்பங்கள் மட்டுமின்றி இருபுறமும் உள்ள பல்வேறு உறவினர்களின் வாக்கு வாதங்களுடன் சிலசமயம் சட்டரீதியான முறையீடுகள் வைர வந்து விடுகிறது, எனவே நல்லனவற்றை நாம் ஓதுக்குதல் ஆகாது. ஆதலால் நாம் நமது முன்னோர்கள் கடை பிடித்த நல்ல பல வழிகளை தற்போதும் கடைபிடித்து அதன்கண் கிடைக்கின்ற உயர்வுகளை நாமும் பெற்று நமது அடுத்த சந்ததியினரும் பெரும் பொருட்டு நாம் ஒவ்வொருவரும் வழிகாட்டியாகத் திகழவேண்டுமல்லவா.சுபம்,
0 comments:
Post a Comment