சான்றோர் வார்த்தைகள் ஒரு சில



பொதுவாக எல்லோருக்கும் அதிக வேளைகளில் பயன் தரும் பொதுவான சான்றோர் வார்த்தைகள் ஒரு சில
உண்மை தெய்வ பக்தி உள்ளவரிடத்து தூய்மையான சிந்தனைகளே உண்டாகும்.
நம்முடைய வாழ்வு பிறருக்கு லட்சியமாக அமைந்து விட்டால் நாம் புண்ணியவான்கள் தான்.
அதற்கு ஒரு எளிய வழி
அறிவு பெருகப் பெருக ஆசை சுருங்க வேண்டும்!சோம்பலைத் தவிர்க்க வேண்டும்!
அறவழியில் வாழ்வதால் மகிழ்ச்சியும், சான்றோர் உறவால் ஒழுக்கத்தையும் பெறலாம்.

மேலும் கீழ்க்கண்ட வார்த்தைகளின் படி நம் வாழ்க்கை நெறிமுறைகளை அமைத்துக் கொள்ளலாமல்லவா!
பொறாமை உள்ளவரிடத்து புண்ணியம் இருக்காது!சுகத்தை விரும்புவனிடம் கல்வி இருக்காது!பேராசை உள்ளவரிடத்து நாணம் இருக்காது!உறுதி இல்லாதவரிடத்து எதுவுமே இருக்காது!!
ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்கட்குச் சமம்!அத்தகு தாய் தந்தையர்க்கு தொண்டு செய்பவர்கள் தவம் செய்ய வேண்டியதில்லை!!தந்தை சொல் படி நடப்பவன் சொர்க்கம் அடைகிறான்!!நல்லது அல்லாதவற்றை அக்கணமே மறந்திடுக! பண்பாடு என்பது நம் உயிரினத்ற்கெல்லாம் அச்சாணி! பிறர் தவறை மன்னித்தால் அது மனித குணம்!! அத்தவறை மறந்து நட்பு கொண்டால் அது தெய்வ குணமாகும்!!
நம்மை இறைவன் மன்னிக்க வேண்டுமா? நாம் பிறரை மன்னிக்க வேண்டும்!

0 comments: