என் இனிய தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம் நன்நாளான 21/03/2008 வெள்ளிக்கிழமையன்று சாஸ்தாவை வழிபட அன்புகூர்ந்து வேண்டுகிறேன்





என் இனிய தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம், தரணி பாயும் தாமிரபரணி நதி தீரமாம் நெல்லுக்கு வேலி காத்த நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்பாள் அருள் பாலிக்கும் திருநகரமாம் திருநெல்வேலியின் தனிச் சிறப்புடன் உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்கும் தருணம் அளவிலா அன்புடன் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம். தங்களை இந்த இணையதளம் வழியாக சந்திக்கும் இந்த புனித வேளையில் ஒரு முக்கிய கருத்தைத் தருவதில் பயனுள்ள ஒரு காரியத்தைச் சாதித்த மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்கு உளம் பூரிப்படைகிறேன்,அதாவது வரும் 21 மார்ச் 2008 வெள்ளிக்கிழமை தத்தம் குல தெய்வ வழிபாடு செலுத்தவேண்டிய முக்கியமான நாளான பங்குனி மாத உத்திர நட்சத்திர தினமாகும்.அதாவது பங்குனி உத்திரத் திருநாளாகும். நம் ஒவ்வொருவருக்கும் அத்தகு பங்குனி உத்திர நாளில் தத்தம் முன்னோர்கள் வழிபட்டு வந்த தம் குல சாஸ்தா திருக்கோவல் சென்று அங்குள்ள சாஸ்தாவை வழிபடுவது மரபாகும். அப்படி வழிபடுவதால் நாம் வருங்காலங்களில் செய்யவுள்ள எல்லா பணிகளுக்கும் முன்னோடியாக நமது குலதெய்வமான சாஸ்தா நமக்கு துணையிருப்பதாக ஐதீகம். தாங்களும் அத்தகு நன்நாளான 21/03/2008 வெள்ளிக்கிழமையன்று சாஸ்தாவை வழிபட அன்புகூர்ந்து வேண்டுகிறேன், அவ்வாறு வழிபடுவதன் காரணமாக நமக்கு பயமின்றியும், எதிர்கால மகிழ்வுக்கு சர்வ காரிய சித்தி (எல்லா பணிகளிலும் வெற்றி) கி்டைக்கவும் அருள் கிடைப்பதாக. ஒருவேளை தங்களுக்கு அத்தகு சாஸ்தா வழிபாடு நடத்த போதிய வாய்ப்பு இல்லையெனில் எங்களுக்குத் தெரிவிப்பீர்களானால் அந்நாளில் தஙகள் குடும்பத்தார்க்குரிய வழிபாடு அர்ச்சனை மேற்கொள்ளவும் பிரசாதத்தை தங்களுக்கு அனப்பித் தரவும் ஆவன செய்ய இயலும். மேலும் தஙஙகளுக்கு உரிய சரியான சாஸ்தா கோவி்ல் தெரியவில்லை என்றாலும் தங்கள் குடும்ப ஜாதகம் மற்றும் பிரசன்ன ஆருடம் வழியில் இவிடமறிந்து வழிபட துவங்குவீர்களாக, சுபம், எல்லா அருளும் நலமும் கிடைப்பதாக.

0 comments: